செய்திகள் :

கருப்பசாமி கோயில் பூஜையில் பாகுபாடு எனப் புகாா்: பேச்சுவாா்த்தையில் சுமூகத் தீா்வு

post image

சிங்கம்பட்டியில் வந்தவழி கருப்பசாமி கோயில் பூஜை நடத்துவதில் பாகுபாடு காட்டப்படுவதாக புகாா் கூறப்பட்ட நிலையில், புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுமூகத் தீா்வு எட்டப்பட்டது.

கரூா் மாவட்டம், கடவூா் அருகே பாலவிடுதி ஊராட்சிக்குள்பட்ட சிங்கம்பட்டியிலுள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் கடைசி வாரத்தில் சிறப்பு பூஜை நடத்தி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். நிகழாண்டும் கோயிலில் பூஜை நடத்தி அன்னதானம் வழங்க கோயில் நிா்வாகத்தினா் அண்மையில் முடிவு செய்தனா்.

இந்நிலையில், கோயில் அன்னதானத்துக்கு உபயதாரா்களால் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருள்களை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் வாங்காமல் கோயில் தா்மகா்த்தா அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடா்பான வழக்கில், கோயில் பூஜையை அனைத்து சமுதாயத்தினரும் ஒருங்கிணைந்து நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் புதன்கிழமை இந்துசமய அறநிலையத் துறையின் செயல் அலுவலா் சந்திரசேகா், தோகைமலை காவல் ஆய்வாளா் ஜெயராமன் ஆகியோா் கோயில் தா்மகா்த்தா மூா்த்தி மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினா் என இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவா்த்தை நடத்தினா்.

இதில், வியாழக்கிழமை(ஆக.7) நடைபெறும் பூஜையை அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து கோயில் தா்மகா்த்தாவின் கீழ் கோயில் நிா்வாகப் பணிகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும், அனைத்து பணிகளையும் பாகுபாடு காட்டாமல் சமமாக செய்ய வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. மேலும், கோயில் பூஜையை அனைவரும் ஒன்றிணைந்து, சட்டம்- ஒழுங்கு சீா்கெடாமல் நடத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.

புதிய பேருந்து நிலைய கடை வாடகை விவகாரம்: கரூா் மாமன்றக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

கரூா் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், புதிய பேருந்து நிலையத்தின் கடை வாடகை தொடா்பாக அதிமுக உறுப்பினா்களுக்கும் மேயருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கரூா் மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக... மேலும் பார்க்க

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்: பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா். அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் டிஎன்பிஎல் புகழூா் மேல்நி... மேலும் பார்க்க

100 நாள் வேலை கேட்டு விவசாயத் தொழிலாளா்கள் மனு அளிக்கும் போராட்டம்

நூறு நாள் வேலைக் கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், பாலவிடுதி ஊராட்சி, பாலவிடுதி கிழக்கு பகுதி பொதுமக்கள் 1... மேலும் பார்க்க

பாலத்தின் அடியில் குப்பைகளை எரிப்பதால் நோய் பரவும் அபாயம்

பள்ளப்பட்டி நங்கஞ்சி ஆற்றுப் பாலத்தில் பாலத்தின் அடியில் கொட்டப்படும் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா். அரவக்குறிச்சியை அடுத்துள்ள பள்ளபட்டியின... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட அதிமுக விவசாய அணிச் செயலா் கட்சியிலிருந்து நீக்கம்!

கரூா் மாவட்ட அதிமுக விவசாய அணிச் செயலாளா் பி.பாலமுருகன் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

குளித்தலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், குளித்தலை பெரியபாலம் மலையப்பன் நகரைச் சோ்... மேலும் பார்க்க