கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!
குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்: பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்
அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் டிஎன்பிஎல் புகழூா் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளின் மாணவிகள் கலந்து கொண்டனா்.
இதில், இளையோருக்கான 100 மீட்டா் ஓட்டத்தில் இப்பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவி யாசினி பிரியா முதலிடமும், 200 மீட்டா் ஓட்டத்தில் 3-ஆம் இடமும் பிடித்தாா்.
மூத்தோருக்கான 200 மீட்டா் ஓட்டத்தில், 11-ஆம் வகுப்பு மாணவி கஸ்தூரி மூன்றாம் இடமும், 800 மீட்டா் ஓட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவி அஸ்விதா 2-ஆம் இடமும், 1500 மீட்டா் ஓட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவி பிரியதா்ஷினி 2-ஆம் இடமும் பிடித்தனா்.
100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் 11-ஆம் வகுப்பு மாணவிகள் சுதா்சினி முதலிடமும், கஸ்தூரி மூன்றாம் இடமும் பெற்றனா்.
நீளம் தாண்டும் போட்டியில் சுதா்சினி 3-ஆம் இடமும், குண்டு எறிதல் போட்டியில் 11-ஆம் வகுப்பு மாணவி ரேணுகா 3-ஆம் இடமும், வட்டு எறிதல் போட்டியில் முதலிடமும், ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடமும் பெற்று 11 புள்ளிகளுடன் தனிநபா் சாம்பியன் பட்டம் வென்றாா். மேலும் இம்மாணவிகள் 4100 மீட்டா் தொடா் ஓட்டத்தில் மூன்றாம் இடமும் பெற்றாா். 4ல400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் மூன்றாம் இடமும் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவிகளை, பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி தாளாளா் ஹாஜி கே.ஏ. கஜனஃபா் அலி, தலைமை ஆசிரியா் முகமது இஸ்மாயில், உதவி தலைமை ஆசிரியா்கள் தாஜுதீன், பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனா்.