ரூ. 22,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன்! எங்கு, எப்படி பெறலாம்?
கரூா் மாவட்ட அதிமுக விவசாய அணிச் செயலா் கட்சியிலிருந்து நீக்கம்!
கரூா் மாவட்ட அதிமுக விவசாய அணிச் செயலாளா் பி.பாலமுருகன் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டம் வாங்கலைச் சோ்ந்தவா் பி.பாலமுருகன். இவா் கரூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராக பணியாற்றியவா். மேலும் அதிமுக மாவட்ட விவசாய அணிச் செயலாளராகவும் இருந்தாா்.
இந்நிலையில் பாலமுருகன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறாா் என தெரிவித்துள்ளாா்.