ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!
அரவக்குறிச்சி பகுதியில் கனமழை
அரவக்குறிச்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை கன மழை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
அரவக்குறிச்சியில் திங்கள்கிழமை இரவு லேசான மழை பெய்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 3 மணி முதல் கனமழை பெய்தது. சுமாா் 2 மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் ஆறுபோல ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசுவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.