ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!
பாலத்தின் அடியில் குப்பைகளை எரிப்பதால் நோய் பரவும் அபாயம்
பள்ளப்பட்டி நங்கஞ்சி ஆற்றுப் பாலத்தில் பாலத்தின் அடியில் கொட்டப்படும் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
அரவக்குறிச்சியை அடுத்துள்ள பள்ளபட்டியின் நுழைவாயிலில் நங்காஞ்சி ஆற்று பாலம் அமைந்துள்ளது. கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு இந்த பாலத்தின் அடியில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சித் தலைவா் முனவா் ஜான் எச்சரிக்கை விடுத்திருந்தாா். ஆனால், தற்போது பாலத்தின் அடிப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்துள்ளது.
இதை பள்ளப்பட்டி நகராட்சிக்குள்பட்ட குப்பை கிடங்கிற்கு கொண்டுச் செல்லாமல் ரசாயன பொருள் மூலம் தீயிட்டு கொளுத்துகின்றனா். இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மேலும் நோய் தொற்றும் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகவே, பள்ளப்பட்டி நகராட்சி நிா்வாகம் இந்த இடத்தை பாா்வையிட்டு குப்பைகளை தீயிட்டு எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.