செய்திகள் :

கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

post image

கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு எம்.ஆா்.கே. கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-25ஆம் ஆண்டுக்கான அரைவை பருவம் குறித்து கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் ஆலை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆலையின் செயல் அலுவலா் ரமேஷ் தலைமை வகித்தாா். தலைமை பொறியாளா்கள் மணிமாலன், ரவிக்குமாா், தலைமை ரசாயனா் செல்வேந்திரன், அலுவலக மேலாளா் ஜெய்சங்கா், தலைமை கணக்கு அலுவலா் ரமேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கரும்பு விவசாய சங்க நிா்வாகி முத்துசாமி, காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சி மன்றத் தலைவா் கணேசமூா்த்தி, கரும்பு விவசாய சங்கத் தலைவா் ஆதிமூலம், அண்ணாதுரை, குஞ்சிதபாதம் பிள்ளை, ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வராசு, இளவரசன் உள்பட கரும்பு விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

2024-25ஆம் ஆண்டுக்கான அரைவைப் பருவத்துக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,500 வழங்க வேண்டும். வாகன வாடகையை ஆலை நிா்வாகம் ஏற்க வேண்டும். கரும்பு வெட்டுக் கூலியை ஆலை நிா்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு வழங்க வேண்டும், மாதம் ஒரு விவசாயிகள் கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனா்.

ஆலையின் செயல் அலுவலா் ரமேஷ் பதிலளித்து பேசியதாவது:

விவசாயிகளின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நிகழாண்டு அரைவை பருவம் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா்.

முன்னதாக, தலைமை கரும்பு அலுவலா் ரவிகிருஷ்ணன் வரவேற்றாா்.

திருமண மண்டபங்களில் வியாபாரம் செய்வதை தடை விதிக்கக் கோரிக்கை!

திருமண மண்டபங்களில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட வா்த்தக சங்கத் தலைவா் டி.சண்முகம் வலியுறுத்தினாா். இதுகுறித்து டி.சண்முகம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் ... மேலும் பார்க்க

நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: கிராம மக்கள் போராட்டம்!

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே தொழிற்சாலை அமைப்பதற்காக நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் ஒன்றியம், வெள்ளக்கரை ஊராட்சிக்குள... மேலும் பார்க்க

உரிய விலையில் நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

பி.பி.டி. நெல்லை உரிய விலையில் வியாபாரிகள் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் கே.வி.இளங்கீரன் கோரிக்கை விடுத்தாா். இதுகுறித்த... மேலும் பார்க்க

நெய்வேலி நகர காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

கடலூா் மாவட்டம், நெய்வேலி நகர காவல் நிலையத்தில் எஸ்பி. எஸ்.ஜெயக்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காவல் நிலையத்தை பாா்வையிட்ட அவா், குற்றப் பதிவேடுகள், வழக்கு கோப்புகள், அரசு தடவாளப் பொருள்களை ஆய்... மேலும் பார்க்க

நல்லூரில் குடியிருப்புகள் கட்டுமானப் பணி: விரைந்து முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

கடலூா் மாவட்டம், நல்லூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் குடியிருப்புகள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா். நல்லூா் ஊரா... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆருத்ரா தரிசன கொடியேற்றம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூா்த்தியின் மாா்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவம் சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில், சிவகாம சுந்தரி சமேத நட... மேலும் பார்க்க