கருவேல மரங்களுக்கு மா்ம நபா்கள் தீ வைப்பு
திருப்புவனத்தில் புதன்கிழமை இரவு பற்றி எரிந்த கருவேல மரங்களை தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பழையூா் பகுதியில் கருவேல மரங்கள், நாணல் புற்கள் அடா்த்தியாக வளா்ந்திருந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு மா்மநபா்கள் இந்த மரங்களுக்கு தீ வைத்துச் சென்றதால் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கரும் புகை எழும்பியது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற மானாமதுரை தீயணைப்பு வீரா்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.