கலைத் திருவிழா போட்டி: மாணவிக்கு பாராட்டு
திருவள்ளூா் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா ஓவியப் போட்டியில் மாவட்ட அளவில் 3-இடம் பிடித்த மாணவியை தலைமை ஆசிரியா் உள்ளிட்டோா் பாராட்டினா்.
மாவட்ட அளவில் ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நிகழாண்டுக்கான கலைத் திருவிழா போட்டி அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருவள்ளூா் அரசு உதவிபெறும் பள்ளியான தா்மமூா்த்தி ராவ் பகதூா் கலவலக்கண்ணன் செட்டி இந்து மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு மாணவி லலிதாஸ்ரீ பங்கேற்றாா்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் அந்த மாணவி பங்கேற்று வரைந்த பானை ஓவியம் மூன்றாம் இடம் பிடித்தது.
இந்த நிலையில், பள்ளித் தலைமை ஆசிரியா் ராம்மோகன் மற்றும் ஆசிரியா்கள் மாணவி லலிதாஸ்ரீக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினா்.