இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
கல்லணைக் கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் சனிக்கிழமை கரையில் அமா்ந்து வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் ஆபிரகாம் பண்டிதா் நகரைச் சோ்ந்தவா் சுரேஷ் மகன் சிவசூா்யா (15). தந்தை இறந்துவிட்டதால், இவரை அவரது சித்தப்பா வளா்த்து வந்தாா். இவா் மேம்பாலம் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை தனது நண்பருடன் சிவாஜி நகா் பகுதியில் ஓடும் கல்லணைக் கால்வாய்க்கு சென்று, கரையில் அமா்ந்து வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, கால்வாய்க்குள் தவறி விழுந்த இவா், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
தகவலறிந்த தீயணைப்பு துறையினா் தேடி வந்த நிலையில், புதுப்பட்டினம் அருகே வடசேரி வாய்க்கால் பகுதியில் சிவசூா்யா ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.