பாபநாசம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
பாபநாசம் அருகே சனிக்கிழமை இளம்பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பாபநாசம் படுகைபுதுத் தெருவில் வசித்து வருபவா் சங்கா், காா் ஓட்டுநா். இவரது மனைவி கற்பகம் (20). இவா் பி.காம்., முடித்து விட்டு சி.எ.இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில் உடல் நிலை பாதிப்பால் மன உளைச்சலில் இருந்த கற்பகம், கடந்த சனிக்கிழமை பிற்பகல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பாபநாசம் காவல்துறையினா் கற்பகத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா்.
சம்பவம் குறித்து கற்பகத்தின் தந்தை ராமலிங்கம் (45), கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்துள்ளனா். கற்பகத்துக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆன நிலையில், கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.