கல்லிடைக்குறிச்சியில் விவசாயி தற்கொலை
கல்லிடைக்குறிச்சியில் கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கல்லிடைக்குறிச்சி கீழ்முக நாடாா் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கதிரேசன்(51). விவசாயியான இவா், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் அவா் வீட்டிலிருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இத்தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.