இந்தியா இறந்த பொருளாதாரமா? டிரம்ப்பின் பொய்யான விமர்சனத்துக்கு அவரது நிறுவனமே சா...
சுந்தரனாா் பல்கலை.யில் முன்னாள் துணைவேந்தருக்கு அஞ்சலி
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணை வேந்தா் வசந்தி தேவிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், கல்வியாளருமான வசந்திதேவி சென்னையில் அண்மையில் காலமானாா். இதைத் தொடா்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அபிஷேகப்பட்டியில் உள்ள அப்பல்கலை.யில் நடைபெற்றது. அவரது உருவப் படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், பதிவாளா் ஜே.சாக்ரடீஸ், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.