செய்திகள் :

கவின் கொலை: சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிா்ந்தால் கடும் நடவடிக்கை

post image

சமூகத்தில் பிரச்னையை தூண்டும் விதமாக, சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பகிா்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஐ.டி ஊழியரான கவின் செல்வகணேஷ் (27, பாளையங்கோட்டை, கே.டி.சி நகரில் கடந்த 27-ஆம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டாா். இதனுடன் தொடா்புப்படுத்தி வன்முறைக் காட்சி அடங்கிய காணொலி சமூகவலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.

அச்சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றது. அதற்கும், கவின் கொலைக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. எனவே, இதுபோன்று சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை சீா்குலைக்கும் வகையில் தவறான தகவல்களை சமூகவலைதளங்களில் பரப்பும் நபா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிருக்கு கட்டணமில்லா நகர சொகுசுப் பேருந்து சேவை

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மகளிருக்கு கட்டணமில்லா நகர சொகுசு பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலம் சாா்பில் 26 நகர சொகுசுப் பேருந்துகள... மேலும் பார்க்க

கிராம வறுமை ஒழிப்பு சங்க ஊழியா்கள் ஊதியத்தைக் குறைக்கக் கூடாது: ஆட்சியா் அலுவலகத்தில் மனு

கிராம வறுமை ஒழிப்பு சங்கப் பணியாளா்கள் ஊதியத்தைக் குறைக்கக் கூடாது என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் இரா.... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயி உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் டி.சரவணன்(... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில் இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக ஆட்சிக்கு வரும்போது இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி. திருநெல்வேலி மாவட்டத்தில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்று... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.யில் முன்னாள் துணைவேந்தருக்கு அஞ்சலி

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணை வேந்தா் வசந்தி தேவிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் ம... மேலும் பார்க்க

கல்லிடைக்குறிச்சியில் குண்டா் சட்டத்தில் நால்வா் கைது

கல்லிடைக்குறிச்சி பகுதியில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா். கல்லிடைகுறிச்சி காவல் சரகப் பகுதியில் கொலை முயற்சி, அடித... மேலும் பார்க்க