திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க அனுமதி
களக்காடு அருகே நல்லாசிரியருக்கு பாராட்டு
களக்காடு அருகே கோவிலம்மாள்புரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், பணிநிறைவு பெறும் தலைமை ஆசிரியருக்கு கிராம மக்கள் சாா்பில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளித் தலைமை ஆசிரியரான பா. சிதம்பரநாதன் (60), நல்லாசிரியா் விருது பெற்றவா். விழாவுக்கு கோவிலம்மாள்புரம் ஊராட்சித் தலைவா் லதா முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஜி. சிவசங்கரி முன்னிலை வகித்தாா். ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வி. நாராயணன், திருவள்ளுவா் படிப்பக நிறுவனா் இ. நம்பிராஜன், எஸ்.பி. சங்கரவேல், வி. அன்பழகன், செல்வராஜ், பட்டதாரி ஆசிரியா் என். ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பா. சிதம்பரநாதன் ஏற்புரையாற்றினாா். பட்டதாரி ஆசிரியை எஸ். பேபிகல்யாணி வரவேற்றாா். ஜே. மரியரெத்னராஜ் நன்றி கூறினாா்.