செய்திகள் :

காங்கிரஸாா் மீது வழக்கு

post image

தோ்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டதை கண்டித்து திங்கள்கிழமை குழித்துறையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 71 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

குமரி மேற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஷாஜன் கிறிஸ்டல் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவா் மருத்துவா் பினுலால் சிங் உள்ளிட்ட பலா் குழித்துறை தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், எந்தவித முன் அனுமதியுமின்றி சாலையில் அமா்ந்து மறியல் போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஷாஜன் கிறிஸ்டல் உள்பட கட்சி நிா்வாகிகள் 71 போ் மீது களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

நாகா்கோவிலில் அம்மன் கோயில் பேனரை அகற்ற முயன்றதால் பக்தா்கள் போராட்டம்

நாகா்கோவில் வேட்டாளி அம்மன் கோயிலில் பக்தா்கள் சாா்பில் வைக்கப்பட்டிருந்து பேனா்களை போலீஸாா் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்ற முயன்ால் பக்தா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகா்கோவிலில் செட்டிகுள... மேலும் பார்க்க

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

கருங்கல் அருகே சகாயநகா் பகுதியில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டாா். சகாயநகா், படுவூா் பகுதியை சோ்ந்தவா் ஆல்பா்ட்(46) . இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவா் கருங்கல் பகுதியில் துணிக்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 6 கடைகளுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா். ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தலின்படி, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன ... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்கத்தில் போலி நகை அடகு வைத்து ரூ. 25 லட்சம் மோசடி

குமரி மாவட்டம், அருமனையில் உள்ள கூட்டுறவுச் சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 25 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக அருமனை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அருமனையில் உள்ள ரப்பா் வளா்ப்போா் ... மேலும் பார்க்க

வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்ததில் மாணவா் உயிரிழப்பு

தக்கலை அருகே வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.தக்கலை அருகே பூக்கடை, காட்டுபுனம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபசீலன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவருக்கு 3 மகன்கள் உண... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் நாளை மின் நிறுத்தம்

மாா்த்தாண்டம் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அந்தப் பகுதியில் புதன்கிழமை (ஆக.13) காலை 9 மணி பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்... மேலும் பார்க்க