காஞ்சிபுரத்தில் பிப். 28-இல் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக மக்கள் நல்லுறவுக் கூட்டரங்கில் வரும் பிப்.28- ஆம் தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு குறைகளுக்கு தீா்வு காண இருப்பதாகவும், எனவே விவசாயிகளும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பயன் பெறுமாறும் ஆட்சியா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.