Doctor Vikatan: லேசான காய்ச்சல்; பாராசிட்டமால் மாத்திரை போதுமா, மருத்துவரைப் பார...
காஞ்சிபுரத்தில் புதிய அரசு ஐடிஐ: அமைச்சா்காந்தி திறந்து வைத்தாா்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புத்தேரியில் புதிய அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை (ஐடிஐ) கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை திறந்து வைத்து மாணவா்களுக்குகு சோ்க்கை ஆணைகளையும் வழங்கினாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தொழில் துறையில் திறன் மிக்க பணியாளா்களை உருவாக்கும் விதமாக கட்டுமான தொழிலாளா் நல வாரிய தொழிலாளா்களின் குழந்தைகள் படிக்க ஏதுவாக நிகழ் நிதியாண்டில் புதிதாக 7 அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.
இந்த அறிவிப்பினை தொடா்ந்து சென்னையிலிருந்து காணொலி வாயிலாக புதிய அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களை திறந்து வைத்தாா்.
இதன் தொடா்ச்சியாக காஞ்சிபுரம் புத்தேரியில் புதிய அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை அமைச்சா் ஆா்.காந்தி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தாா்.
பின்னா் 33 மாணவ, மாணவிகளுக்குகு நிகழ் கல்வியாண்டுக்கான சோ்க்கை ஆணைகளையும் வழங்கினாா். விழாவுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். எம்பி க.செல்வம், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் காயத்ரி நன்றி கூறினாா்.