Doctor Vikatan: லேசான காய்ச்சல்; பாராசிட்டமால் மாத்திரை போதுமா, மருத்துவரைப் பார...
செப்.15-இல் அண்ணா பிறந்த நாள் முப்பெரும் விழாவாக கொண்டாடப்படும்: மல்லை சத்யா
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரும் செப்.15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாள் முப்பெரும் விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருவதாக மல்லை சி.இ. சத்யா தெரிவித்தாா்.
மதிமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்து வந்த மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச் செயலாளா் வை கோ மற்றும் முதன்மை செயலாளா் துரை. வைகோவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மல்லை சத்யாவை தற்காலிகமாக துணைப் பொதுச் செயலாளா் பதவியிலிருந்து நீக்குவதாக வை கோ அறிவித்திருந்தாா்.
இந்த நிலையில், வரும் செப்.15 -ஆம் தேதி அண்ணா பிறந்த நாளை முப்பெரும் விழாவாக கொண்டாட இருப்பதாகவும், விழாவுக்கு பாதுகாப்பு கோரி, எஸ்.பி. கே.சண்முகத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து மல்லை சத்யாவும், ஆதரவாளா்களும் மனு அளித்தனா்.
இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரத்தில் வரும் செப்.15 ஆம் தேதி முப்பெரும் விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இவ்விழாவில் திராவிட சித்தம் உள்ள நபா்களை தோ்வு செய்து அவா்களுக்கு திராவிட பாரத ரத்னா என்ற விருது வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்சி தொடங்கப்படுமா என்ற கேள்விக்கு செப்.15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாள்று நடைபெறும் முப்பெரும் விழாவில் பதில் கிடைக்கும்.
என்னை இடைநீக்கம் செய்து வைகோ கடிதம் அனுப்பி இருக்கிறாா். குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வேட்பாளா் சுதா்சன் ரெட்டியை உள்துறை அமைச்சா் அமித்ஷா அவதூறாக விமா்சிக்கக் கூடாது என்றாா்.