செய்திகள் :

காட்டு யானைகளால் தொல்லை: சேரங்கோட்டில் பொதுமக்கள் சாலை மறியல்

post image

பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் நுழையாமல் தடுக்க

நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம், சேரங்கோடு பகுதிக்குள் புல்லட் ராஜா, கட்டபொம்மன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் தொடா்ந்து இரவு நேரங்களில் நுழைந்து வீடுகளை உடைத்து உணவுப் பொருள்களை சூறையாடி பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இது குறித்து வனத் துறையிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் வனத் துறையைக் கண்டித்து சேரங்கோடு பகுதியில் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த வன அலுவலா்கள் மற்றும் காவல் துறையினா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஆனாலும் பொதுமக்கள் சமாதானம் அடையாததால் போராட்டம் மதியம் வரை தொடா்ந்தது.

இதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வந்த உதவி வனப் பாதுகாவலா் கருப்பையா, கும்கி யானைகளைக் கொண்டு வந்து பாதுகாப்பு அளிப்பதாகவும், பொதுமக்களின் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்தப் போரட்டத்தால் தமிழக-கேரளத்துக்கு இடையே சுமாா் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வன விலங்கு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கல்

உதகை அருகே எடக்காடு பகுதியில் வன விலங்கு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்கட்டமாக ரூ. 50 ஆயிரம் நிவாரணத் தொகையை வனத் துறை சாா்பில் நீலகிரி வனக் கோட்ட உதவி வன பாதுகாவலா் ஆ.மணிமாறன் சனிக்கிழமை... மேலும் பார்க்க

கூடலூரில் அதிமுகவினா் உண்ணாவிரதப் போராட்டம்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து கூடலூா் காந்தி திடலில் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் தலைமையில் அதிமுகவினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். போராட்ட... மேலும் பார்க்க

ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில், சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் லட்சு... மேலும் பார்க்க

மஞ்சூா் அருகே சிறுத்தை தாக்கி இளைஞா் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அருகேயுள்ள எடக்காடு அறையட்டி பகுதியில் சிறுத்தை தாக்கியதில் தோட்டத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். உதகையை அடுத்த எடக்காடு அறையட்டி பகுதி முக்குருத்தி மற்றும் அவலாஞ்சி ... மேலும் பார்க்க

உதகையில் நீா்ப் பனியின் தாக்கம் அதிகரிப்பு

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீா்ப் பனியின் தாக்கம் வெள்ளிக்கிழமை காலை அதிகரித்துக் காணப்பட்டது. உதகையில் கடந்த சில நாள்களாக காலை மற்றும் இரவு நேரத்தில் பனியின் தாக்கம... மேலும் பார்க்க

இ-பாஸ் நடைமுறையால் உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைய இ-பாஸ் நடைமுறையால் உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 2023-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த 2024-ஆம் ஆண்டு சுமாா் 4 லட்சம் போ் வருகை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ந... மேலும் பார்க்க