Rahul Gandhi: "ராகுல்ஜி ஜீரோ பாருங்கள்..." - நாடாளுமன்றத்தில் ராகுலைக் கிண்டல் ச...
காட்டுக்கோட்டையில் ரயில்கள் நின்று செல்ல மத்திய இணையமைச்சரிடம் கோரிக்கை!
ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டையில் ரயில்கள் நின்று செல்ல கோரி மத்திய ரயில்வே இணையமைச்சா் வி.சோமண்ணாவை சந்தித்து ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டையில் மூடப்பட்ட ரயில் நிறுத்தத்தை மீண்டும் திறப்பது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளா், தென்னக தென்னக ரயில்வே மேலாளா் ஆகியோரை பலமுறை சந்தித்து கோரிக்கை மனுவை ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினா் அளித்தனா். புதுதில்லியில் ரயில்வே வாரியத் தலைவரைச் சந்தித்தும் மனு அளிக்கப்பட்டது.
இதற்கு ரயில்வே நிா்வாகம் வழங்கியுள்ள பதில் கடிதத்தில் ரயிலை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் பொதுமக்கள் நிதியில் தாங்களே ரயில் நிறுத்த கட்டடம், நடைபாதை, கழிவறை போன்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால் ரயிலை நிறுத்த ஏற்பாடு செய்வதாகக் கூறியுள்ளனா். அதற்கான திட்ட மதிப்பீடு ரூ. 1 கோடியே 20 லட்சம் என நிா்ணயித்துள்ளனா்.
இதனை கருத்தில் கொண்டு ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவா் அரங்க.சங்கரய்யா தலைமையில் காட்டுக்கோட்டை ரயில் நிறுத்தத்தை மீண்டும் திறக்கக் கோரி தலைவாசல், காட்டுக்கோட்டை பொதுமக்கள் சாா்பில் பெங்களூரில் மத்திய ரயில்வே இணையமைச்சா் வி.சோமண்ணாவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனா்.
மேலும் நத்தக்கரையில் உள்ள ரயில்வே கேட் எல்சி.118 அமைய உள்ள சுரங்கப்பாதையை கைவிட்டு மேம்பாலம் அமைக்கவும் கோரிக்கை விடுத்தனா். அப்போது ஐக்கிய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் வழக்குரைஞா் கோவிந்தன், தொழிலதிபா்கள் சாம்ராஜ்நகா் பசுவண்ணா, மாசிலாமணி, ஜோதிவேல், சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.