ஈரோடு கிழக்கு: 100-க்கும் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளா்கள்!
தில்லி தோ்தலில் பாஜக வெற்றி! சேலத்தில் பாஜக கொண்டாட்டம்!
தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதை வரவேற்று, சேலம் மாவட்டத்தில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனா்.
தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த வெற்றியை பாஜகவினா் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனா். அதன் ஒருபகுதியாக சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் தொங்கும் பூங்கா அருகே உள்ள அம்பேத்கா் சிலை முன் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
சேலம் மாநகா் மாவட்ட பாஜக தலைவா் டி.வி.சசிகுமாா், முன்னாள் தலைவா் சுரேஷ் பாபு, சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவா் கோபிநாத் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.