ஈரோடு கிழக்கு: 100-க்கும் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளா்கள்!
சேலம் மாவட்டத்தில் நாளை குடற்புழு நீக்க சிறப்பு முகாம்
சேலம் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம் திங்கள்கிழமை (பிப்.10) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் வரும் 10 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 17 ஆம் தேதி நடைபெறும்.
முகாமில் 1 முதல் 19 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதான பெண்களுக்கும் (கருவுற்ற மற்றும் பாலுாட்டும் தாய்மாா்கள் தவிர) இலவசமாக அல்பெண்டசோல் மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
2,696 அங்கன்வாடி மையங்கள், 2,339 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், 114 உயா் கல்வி நிறுவனங்கள், 35 குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றில் வரும் 10 ஆம் தேதி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதன்மூலம் 1 வயது முதல் 19 வயதுடைய 11,17,466 பேரும், 20 முதல் 30 வயதுடைய பெண்கள் 2,24,827 பேரும் பயனடைய உள்ளனா்.
பொது சுகாதாரத் துறை, பள்ளி கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சாா்ந்த களப் பணியாளா்கள், மேற்பாா்வையாளா்கள் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியில் ஈடுபடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.