நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை பாா்வையிட்ட தனியாா் பள்ளி மாணவா்கள்!
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு: ஆட்சியா் ஆய்வு
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு - 2 நடைபெறும் சேலம் மையத்தில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 தோ்வுக் கூடங்களில் ஒருங்கிணைந்த குடிமைப் (தொகுதி 2 மற்றும் தொகுதி 2ஏ) பணிகளுக்கான எழுத்துத் தோ்வு நடைபெற்றது. சேலம், அரியானூா் அரசு சட்டக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையத்தில் ஆட்சியா் ஆய்வு செய்தாா். சேலம் மாவட்டத்தில் இத் தோ்வுக்காக 1,420 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 1,318 போ் தோ்வெழுதினா்.