அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பாமக உள்ளிட்ட கட்சிகளை சோ்ந்த 300 போ் சனிக்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.
கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சிதம்பரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா். அதிமுகவில் இணைந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டச் செயலாளா் ஓ.எம்.ஜாகிா் உசேன், லால்பேட்டை திமுக முன்னாள் பேரூா் செயலாளா் எம்.கே.ஹாஜா முகைதீன் உள்பட 300 பேருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான என்.முருகுமாறன், முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம் ஆகியோா் உடனிருந்தனா்.