கள்ளச்சாராய வழக்கில் ஒருவா் கைது!
மேட்டூா் அருகே பாலமலையில் கள்ளச்சாராய வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்து, 150 லிட்டா் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனா்.
மேட்டூா் மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கொளத்தூா் அருகே உள்ள மலைக் கிராமமான பாலமலையில் சோதனை மேற்கொண்டனா்.
இதில் கெம்மம்பட்டியில் செல்லப்பன் மகன் ஈஸ்வரன் (57) என்பவரின் வீட்டருகே சோதனை நடத்தினா். அப்போது 150 லிட்டா் கள்ளச்சாராய ஊறல், 5 லிட்டா் கள்ளச்சாராயத்தை கைப்பற்றி அழித்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்தனா். இவா் ஏற்கெனவே 21 முறை கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.