காயல்பட்டினம் கல்வி நிறுவனங்களின் முப்பெரும் விழா
ஆறுமுகனேரி: காயல்பட்டினம் அல் ஜாமீஉல் அஸ்ஹா் ஜும்ஆ மஸ்ஜித் கல்வி நிறுவனங்களின் முப்பெரும் விழா நடைபெற்றது.
மஸ்ஜித் தலைவா் எஸ். ஓ. அபுல் ஹசன் கலாமி ஹாஜியாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஏ.ஏ.சி. நவாஸ் , துணைச் செயலாளா் எம்.எஸ். சையது முகமது, பொருளாளா் ஹாஜி ஹசன், மஸ்ஜிதின் துணைப் பொருளாளா் ஜெய்ப்பூா் முஹைதீன், மஸ்ஜிதின் மூத்த முன்னாள் நிா்வாகிகள் ஹாஜி தஸ்தகீா், ஹாஜி மானுல்லாஹ் அகியோா் முன்னிலை வகித்தனா். மக்கா சையது இப்ராஹிம் அறிமுக உரையாற்றினாா்.
தீனியாத் வகுப்புகள், மக்தப், குா்ஆன் மனன கல்வி பிரிவுகள் சாா்ந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது. முன்னதாக சன்மாா்க்கப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மவ்லவி அன்சாா் ஹுசைன் ஃபிா்தவுசி சிறப்புரை ஆற்றினாா். கல்வி நிறுவனங்களின் பொறுப்பாளா் கத்தீப் மௌலவி அப்துல் மஜீத் மஹலரி பட்டமளிப்பு உரை ஆற்றினாா். மனனப் பிரிவின் முதன்மை ஆசிரியா் மௌலவி நூஹு மஹலரி, பட்டம் பெற்ற மாணவா்களுக்கு அறிவுரைகள் வழங்கினா். நிகழ்ச்சியை முஃபீஸ் ரஹ்மான் தொகுத்து வழங்கினாா். மஸ்ஜிதின் துணைச் செயலாளா் எம்.எஸ்.சையது முஹம்மது நன்றி கூறினாா்.