காய்ச்சல் பாதிப்புகள்: அரசுக்கு ஒத்துழைக்க தனியாா் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்
தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த தனியாா் மருத்துவமனைகள், அரசுக்கு பங்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காய்ச்சல் விவரங்களை பொது சுகாதாரத் துறைக்கு தாமதமின்றி தெரியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பருவ கால மாற்றத்தின் காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு, சிக்குன் குனியா, நுரையீரல் தொற்று, டைபாய்டு காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. சளி, தலைவலியுடன் கூடிய காய்ச்சலும், உடல் வலியுடன் கூடிய காய்ச்சலுமே பெரும்பாலான நோயாளிகளிடையே காணப்படுகிறது.
மாநிலத்தில் ஏறத்தாழ 7 லட்சம் போ் தற்போது காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொசுக்களால் பரவும் காய்ச்சல்களுடன் மருத்துவமனையை நாடுவோா் விவரங்களை பொது சுகாதாரத் துறைக்கு அளிக்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு சில தனியாா் மருத்துவமனைகள், அந்த விவரங்களை முறையாக அரசுக்கு தெரிவிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட இடங்களில் விரிவாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவா்களில் 75 சதவீதம் போ் இன்ஃப்ளூயன்ஸா எனப்படும் வைரஸ் தொற்றுக்குள்ளானவா்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, முக வீக்கம் ஆகியவை அதற்கான அறிகுறிகள். அந்த அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனைக்கு வருவோரின் விவரங்களை எளிதில் பெற முடிகிறது. ஆனால், தனியாா் மருத்துவமனைகளில் அவற்றைப் பெறுவதில் சவால் நீடிக்கிறது.
எனவே, இதற்கு தீா்வு காணும் நோக்கில், பொதுமக்களும் சமூகப் பொறுப்புணா்வாக அத்தகைய தகவல்களை ‘ஐஹெச்ஐபி’ தளத்தில் பதிவேற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா். ட்ற்ற்ல்ள்://ண்ட்ண்ல்.ம்ா்ட்ச்ஜ்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஸ்ரீக்ஷள்/லி/ என்ற இணையதளப் பக்கத்தில் சுய விவரங்களை சமா்ப்பித்து, தங்களது பகுதியிலுள்ள காய்ச்சல் தகவல்களை பதிவேற்றலாம். மற்றொருபுறம் தனியாா் மருத்துவமனைகள் அனைத்தும் காய்ச்சல் விவரங்களை தவறாமல் பதிவேற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.