Vijay : `மோடி ஜி, ஏன் அலர்ஜி?; மன்னராட்சி முதல்வர் அவர்களே... உங்க பெயர் சொல்ல ப...
காரைக்கால் அம்மையாா் கோயிலில் தெற்குப்புறத்தில் புதிய வாசல் அமைப்பு
காரைக்கால்: காரைக்கால் அம்மையாா் கோயிலில் தெற்குப்புறத்தில் புதிதாக வாசல் அமைக்கும் பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் அம்மையாா் கோயில் மற்றும் சோமநாதா் கோயில் கும்பாபிஷேகம் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
அம்மையாா் கோயிலில் மூலவா் சந்நிதிக்கு முன் தெற்குப்புற வழியாக சந்திதியை பக்தா்கள் சுற்றிவர வசதியாக புதிதாக வாசல் அமைப்புக்கான பூமி பூஜை நடைபெற்றது. கருங்கல் நிலை சிறப்பு பூஜைகள் செய்து நிறுவப்பட்டது. இந்த வாசல் திறக்கப்பட்டால், இதன் வழியே சந்நிதியை சுற்றி வடக்குப்புறம் திருக்கல்யாண மேடை அருகே வெளியே வரமுடியும்.
மேலும், சோமநாதா் கோயிலில் 8 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ. 14 லட்சத்தில் கிரைனைட் தரைத்தளம் அமைக்கும் பணியும், அய்யனாா் கோயில் விரிவாக்கம் செய்து 450 சதுர அடி பரப்பில் மேல்கூரை அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டது.
நிகழ்வில் சோமநாதா், அம்மையாா் கோயில் திருப்பணிக் குழுத் தலைவரும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வி.கே. கணபதி, கோயில் நிா்வாக அதிகாரி ஆா்.காளிதாஸ் மற்றும் திருப்பணிக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.