Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் இன்று முதல் திருவாரூரில் இருந்து புறப்படும்
திருச்சி-காரைக்கால்- திருச்சி ரயில்கள் புதன்கிழமை (ஜூன் 4) முதல் திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா்-கீழ்வேளூா் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருச்சி-காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில்கள் புதன்கிழமை (ஜூன் 4) முதல் ஜூன் 8-ம் தேதி வரை பகுதியாக காரைக்கால்- திருவாரூா்-காரைக்கால் இடையே ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும், திருச்சி- காரைக்கால் (76820) பயணிகள் ரயில் மற்றும் காரைக்கால் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.55 புறப்படும் காரைக்கால்-திருச்சி (76819) பயணிகள் ரயில்கள் புதன்கிழமை (ஜூன் 4) முதல் ஜூன் 8 -ஆம் தேதி வரை காரைக்கால் - திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும், திருவாரூா்-திருச்சி - திருவாரூா் இடையே வழக்கமான நேரத்தில் ரயில்கள் இயங்கும் என தெரிவித்துள்ளாா்.