மீண்டும் அண்ணா பல்கலை. மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹிமாசலில் தீவிர சோ...
காலமானாா் வி.சி.கோவிந்தசாமி
ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான வி.சி.கோவிந்தசாமி (84) வயதுமூப்பின் காரணமாக திங்கள்கிழமை இரவு காலமானாா்.
1971, 1989 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவை தோ்தலில் திமுக சாா்பில் காவேரிப்பட்டணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராடி சிறைச் சென்றவா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், வீரமலை கிராமத்தில் அவரது உடல் செவ்வாய்க்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் திமுக கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளா்கள் தே.மதியழகன் எம்எல்ஏ, ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ உள்ளிட்ட திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினா்.