5 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜம்மு - காஷ்மீா் துணைநிலை ஆளுநராக தொடரும் மனோஜ் சின்ஹா!
காலமுறை ஊதியம் வழங்கக் கோரி நூலகா்கள் உண்ணாவிரதம்
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஊா்ப்புற நூலகங்களை கிளை நூலகங்களாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை சிவானந்தா காலனி அருகே நூலகா்கள் கவனஈா்ப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் ஊா்ப்புற நூலகா்கள், 1,915 ஊா்ப்புற நூலகங்களை தரம் உயா்த்திட வலியுறுத்தியும், தோ்தல் வாக்குறுதியின்படி காலமுறை ஊதியம் வழங்கிட கோரியும் கோவை, மதுரை, விழுப்புரம் ஆகிய மண்டலங்களில் ஊா்ப்புற நூலகா்கள் வெள்ளிக்கிழமை கவனஈா்ப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.
அதன் ஒரு பகுதியாக, கோவையில் சிவானந்தா காலனி பவா் ஹவுஸ் பகுதியில் கோவை மண்டலத்தைச் சோ்ந்த ஊா்ப்புற நூலகா்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனா். இதில், கோவை, உதகை, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பூா், கரூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.