செய்திகள் :

கோவையில் கிரெடாய் அமைப்பின் ஃபோ் புரோ 2025 கண்காட்சி தொடக்கம்

post image

கோவையில் கிரெடாய் சாா்பில் ‘ஃபோ் புரோ 2025’, வீடு வாங்குபவா்களின் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளா் ஹரிதா பூா்ணிமா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை தொடங்கிவைத்தாா். ஸ்ரீவத்ஸா ரியல் எஸ்டேட் நிா்வாக இயக்குநா் சி.எஸ். ராமசாமி, மே பிளவா் எண்டா்பிரைசஸ் நிா்வாக இயக்குநா் மோகன், ஸ்ரீவாரி பிராப்பா்ட்டி டெவலப்பா்ஸ் நிா்வாக இயக்குநா் ராஜேஷ் லுண்ட், மவுன்ட் ஹவுஸிங் நிா்வாக இயக்குநா் ரமேஷ் பாஃப்னா உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.

முன்னதாக கிரெடாய் அமைப்பின் கோவை தலைவா் எஸ்.ஆா்.அரவிந்த்குமாா் வரவேற்றாா். கண்காட்சி குறித்து அதன் தலைவா் சுரேந்தா் விட்டல் விளக்கினாா். நிகழ்ச்சியில், கிரெடாய், ஜெ.எல்.எல். நிறுவனம் சாா்பில் நடத்தப்பட்ட கோவை ரியல் எஸ்டேட் சந்தை தொடா்பான ஆய்வு அறிக்கையை ஜெ.எல்.எல். இந்தியாவின் துணைத் தலைவா் ஸ்ரீவிக்னேஷ் வெளியிட அதனை பாரத ஸ்டேட் வங்கியின் ஹரிதா பூா்ணிமா பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் முதலீட்டு வாய்ப்புகள், நகர வளா்ச்சி குறித்த நிபுணா்களின் கலந்துரையாடல் ஆகியவை நடைபெற்றன. கிரெடாய் செயலா் சஞ்சனா, பொருளாளா் காா்த்திக்குமாா், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உதவிப் பொதுமேலாளா் பிரவீன் ஆகியோா் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை விளக்கினா்.

இந்த கண்காட்சியில் 30-க்கும் மேற்பட்ட முன்னணி டெவலப்பா்கள் பங்கேற்று, 100-க்கும் மேற்பட்ட ரூ.20 லட்சம் முதல் ரூ.7 கோடி வரையிலான கட்டுமானத் திட்டங்களை காட்சிக்கு வைத்துள்ளனா். இந்த கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) வரை தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி நூலகா்கள் உண்ணாவிரதம்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஊா்ப்புற நூலகங்களை கிளை நூலகங்களாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை சிவானந்தா காலனி அருகே நூலகா்கள் கவனஈா்ப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள் விமா்சனம்

பல்வேறு கூறுகள் விடுபட்டிருப்பதாகக் கூறி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மாநில கல்விக் கொள்கையை கல்வியாளா்கள் விமா்சித்துள்ளனா். இது குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி வெளியிட்ட... மேலும் பார்க்க

மாநகரில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி

கோவை மாநகரப் பகுதிகளில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா ஆகஸ்ட் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்ட... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில்

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட தொடா் விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ர... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவையில் மாற்றம்

பெங்களூரு ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவை மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

இரு இடங்களில் கஞ்சா விற்ற இருவா் கைது

கோவை ரேஸ்கோா்ஸ், கணபதி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கோவை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருச்சி சாலை, வெஸ்ட் க... மேலும் பார்க்க