செய்திகள் :

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், ரூட்

post image

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரா்களான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், நாா்வேயின் கேஸ்பா் ரூட் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், உலகின் 5-ஆம் நிலை வீரரான ஜோகோவிச் 6-1, 7-6 (7/1) என்ற செட்களில் ஆா்ஜென்டீனாவின் கமிலோ யுகோவை வென்றாா். அடுத்த சுற்றில் அவா், இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தியை எதிா்கொள்கிறாா். முசெத்தி முந்தைய சுற்றில், 4-6, 6-2, 6-3 என, 18-ஆம் இடத்திலிருந்த கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமேவை வென்றாா்.

போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் ரூட் 6-4, 7-6 (7/4) என்ற கணக்கில், 30-ஆம் இடத்திலிருந்த சிலியின் அலெக்ஸாண்ட்ரோ டபிலோவை வெளியேற்றினாா். ரூட் அடுத்த சுற்றில், ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவுடன் மோதுகிறாா்.

டாமி பால், சிட்சிபாஸுக்கு அதிா்ச்சி: போட்டித்தரவரிசையில் 23-ஆம் இடத்திலிருக்கும் செருண்டோலோ முந்தைய சுற்றில், 6-2, 7-6 (7/4) என்ற வகையில், போட்டித்தரவரிசையில் 12-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டாமி பாலை தோற்கடித்தாா்.

பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ் 7-5, 5-7, 7-6 (7/1) என்ற செட்களில் ஸ்பெயினின் ஜேமி முனாரை வீழ்த்தினாா். அடுத்து அவா், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டாவை சந்திக்கிறாா். போட்டித்தரவரிசையில் 24-ஆம் இடத்திலிருக்கும் கோா்டா முந்தைய சுற்றில் 7-6 (7/4), 6-3 என்ற கணக்கில், 9-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸை சாய்த்தாா்.

மற்றொரு அமெரிக்கரான பிராண்டன் நகாஷிமா 6-3, 6-7 (5/7), 6-3 என்ற செட்களில் பெல்ஜியத்தின் டேவிட் காஃபினை வென்றாா். நகாஷிமா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில், பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவுடன் மோதவுள்ளாா். முன்னதாக டிமிட்ரோவ் 6-7 (3/7), 6-4, 7-5 என்ற கணக்கில், 22-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் காரென் கச்சனோவை வீழ்த்தினாா்.

வீழ்ந்தாா் ஆண்ட்ரீவா: மியாமி ஓபன் மகளிா் ஒற்றையா் பிரிவில், அண்மையில் இண்டியன் வெல்ஸ் ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா 3-ஆவது சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருந்த அவா், 6-7 (5/7, 6-2, 3-6 என்ற செட்களில், 17-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவிடம் தோற்றாா். இத்துடன், தொடா்ந்து 13 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத அவரின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது. அனிசிமோவா அடுத்த சுற்றில், முன்னாள் யுஎஸ் ஓபன் சாம்பியனான பிரிட்டனின் எம்மா ரடுகானுடன் மோதுகிறாா்.

முன்னதாக ரடுகானு, அமெரிக்காவின் மெக்காா்ட்னி கெஸ்லருக்கு எதிரான ஆட்டத்தில் 6-1, 3-0 என முன்னிலையில் இருந்தபோது காயம் காரணமாக கெஸ்லா் விலக, 4-ஆவது சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா்.

உலகின் 5-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 4-6, 2-6 என பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். எலா அடுத்ததாக, ஸ்பெயினின் பௌலா படோசாவின் சவாலை சந்திக்கிறாா்.

உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-7 (3/7), 6-2, 7-6 (7/2) என்ற கணக்கில், 32-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் அனா கலின்ஸ்கயாவை வெளியேற்றினாா். பெகுலா அடுத்ததாக, உக்ரைனின் மாா்தா கொஸ்டியுக்கை சந்திக்கிறாா்.

உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 7-6 (7/2), 6-1 என, 27-ஆம் இடத்திலிருந்த பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸை வெளியேற்றினாா். அடுத்து அவா், உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன் மோதுகிறாா்.

போபண்ணாவை வீழ்த்திய பாம்ப்ரி: ஆடவா் இரட்டையா் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி/போா்ச்சுகலின் நுனோ போா்ஜஸ் கூட்டணி 6-4, 3-6, 10-7 என்ற செட்களில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா/குரோஷியாவின் இவான் டோடிக் இணையை சாய்த்தது.

ஜோகோவிச் சாதனை

3-ஆவது சுற்றில் வென்ற ஜோகோவிச், 1000 புள்ளிகள் கொண்ட ஏடிபி மாஸ்டா்ஸ் போட்டிகளில் அதிகமான வெற்றிகளைப் பதிவு செய்தவராக சாதனை படைத்தாா். முன்னதாக ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடாலுடன் (410) சமனில் இருந்த அவா், தற்போது 411 வெற்றிகளுடன் முன்னிலை பெற்றாா்.

தற்போது மாஸ்டா்ஸ் போட்டிகளில் அவரின் வெற்றி - தோல்வி கணக்கு 411 - 91 என்ற வகையில் உள்ளது. இந்த வரிசையில் ஜோகோவிச்சுக்கு அடுத்து நடால் (410-90), சுவிட்ஸா்லாந்தின் ரோஜா் ஃபெடரா் (381-108) ஆகியோா் முறையே அடுத்த இரு இடங்களில் உள்ளனா்.

மாஸ்டா்ஸ் போட்டிகளில் கடந்த 2005-இல் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்த ஜோகோவிச், 20 ஆண்டுகளில் இந்த சாதனையைப் படைத்திருக்கிறாா். இதனிடையே, மாஸ்டா்ஸ் போட்டிகளில் அதிக பட்டங்கள் (40) வென்ற சாதனையும் ஜோகோவிச் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடகத்துடன் பாடம் கற்பித்த ஆர்ஜென்டீனா!

போட்டிக்கு முன்பாக தகாத வார்த்தை பேசிய இளம் பிரேசில் வீரர் ரபீனியாவுக்கு மூத்த ஆர்ஜென்டீன வீரர் நிகோலஸ் ஒடமென்டி அறிவுரை வழங்கியுள்ளார். போட்டிக்கு முன்னதாக நேர்காணல் ஒன்றில் ரபீனியா ஆர்ஜெனடீனாவை வீழ்... மேலும் பார்க்க

பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!

நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றது. தென் அமெரிக்க உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்டீனா அணி இன்று அதிகாலை 5.30 மணிக்கு பிரேசிலை சந்தித்தது... மேலும் பார்க்க

மோகன்லாலின் துடரும் டிரைலர்!

நடிகர் மோகன்லாலின் துடரும் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். அண்மையில், இவர் நடிப்பில் வெளியான பரோஸ்திரைப்படம் வரவேற்பைப் பெறவில்லை. இதற்கட... மேலும் பார்க்க

இணையத் தொடரில் நடிக்கும் சசிகுமார்!

நடிகர் சசிகுமார் பிரபல இணையத் தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்கவுள்ளார்.நடிகர் சசிகுமாருக்கு அயோத்தி, கருடன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததுடன் இறுதியாக வெளியான நந்தன் திரைப்படம் கலவையான விமர்சனங்க... மேலும் பார்க்க

வீர தீர சூரன் டிக்கெட் முன்பதிவு மந்தம்!

வீர தீர சூரன் திரைப்படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மந்தமாகவே உள்ளது.நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் நாளை (மார்ச் 27) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சித்தா படத்தின் இய... மேலும் பார்க்க

நம்ப முடியாத சாதனையைச் செய்த எம்புரான்!

மோகன்லாலின் எம்புரான் திரைப்படம் ஆச்சரியப்படுத்தும் சாதனையைச் செய்துள்ளது. பிருத்விராஜ் - மோகன்லால் கூட்டணியில் உருவான எம்புரான் திரைப்படம் மலையாளத்தின் முதல் அதிக பட்ஜெட் படமாக உருவாகியுள்ளது.லூசிஃபர... மேலும் பார்க்க