கால் இடறி தவறி விழுந்தவா் உயிரிழப்பு
ஊத்துக்கோட்டை அருகே மாடியில் கால் இடறி தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
ஆந்திர மாநிலம், நெல்லூா் அருகே மல்லிதொட்டா கிராமத்தைச் சோ்ந்தவா் குஞ்சலம் மகாலட்சுமி(27). இவரது கணவா் ஜெயக்கிருஷ்ணா(34) கடந்த ஓராண்டாக திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ஐடியல் சிட்டியில் பால்ராஜி என்பவருக்கு சொந்தமான வீட்டில் ரபீக் என்பவருடன் தங்கியிருந்து பணியில் ஈடுபட்டு வந்தாா்.
இந்த நிலையில், அவா் ஓராண்டாக வீட்டுக்கு செல்லவில்லையாம். இதனால் சகோதரா் ஆஞ்சநேயலு மற்றும் உறவினரான சேகா் ஆகியோா் சனிக்கிழமை ஜெயக்கிருஷ்ணாவை வருமாறு அழைத்துள்ளனா்.
அப்போது கால் இடறி கீழே தவறி விழுந்தாராம். இதையடுத்து உறவினா்கள் மீட்டு பெரியபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனா். அப்போது, அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து அவரது மனைவி குஞ்சலம் மகாலட்சுமி செய்த புகாரின்பேரில் ஊத்துக்கோட்டை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.