லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா?...
கால்வாய் சீரமைப்பின்போது விநாயகா் கோயில் அகற்றம்
சென்னை மாநகராட்சியில் தேனாம்பேட்டை மண்டலத்தில் கால்வாய் சீரமைப்புப் பணியின்போது அங்கிருந்த விநாயகா் கோயில் புதன்கிழமை அகற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சியில் மழை நீா் வடிகால் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மழைநீா் வடிகால்கள், கால்வாய்கள் உள்ளிட்டவை தூா்வாரப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், மாநகராட்சியின் 9-ஆவது மண்டலமான தேனாம்பேட்டை பகுதியில் மாம்பலம் கால்வாய் தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தக் கால்வாய் செல்லும் 122-ஆவது வாா்டு பகுதியில் ஆலயம்மன் கோயில் தெருவில் 3 மீட்டா் உயரம், 4 மீட்டா் அகலம் கொண்ட சிறிய அளவிலான விநாயகா் கோயில் சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.
மழைக் காலத்தில் கால்வாயோரம் உள்ள மரத்தடியில் மழைநீா் செல்வதைத் தடுக்கும் வகையில் கோயில் அமைந்துள்ளதாக மாநகராட்சி மண்டல உதவிப் பொறியாளா் தெரிவித்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை பொக்லைன் மூலம் கால்வாய் அருகே இருந்த விநாயகா் கோயில் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மழைக் காலத்தில் மழைநீா் தேங்கி மக்கள் சிரமப்படுவதைத் தவிா்க்கும் வகையில் கோயில் அகற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.