காவலரைத் தாக்கி கொலை மிரட்டல்: பெண் உள்பட 3 போ் கைது
திண்டிவனத்தில் பணியிலிருந்த காவலரைத் தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கிய வழக்கில் பெண் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரை கைது செய்தனா்.
திண்டிவனம் காவல் நிலைய தலைமைக்காவலா் முருகையன், நாகராஜ் ஆகியோா் புதன்கிழமை இரவு திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் சென்னை பேருந்து நிறுத்தம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 4 பேரை போலீஸாா் கண்டித்துள்ளனா்.
இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் தலைமைக் காவலா் முருகையனைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதையடுத்து போலீஸாா் அவா்களைப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனா். இதில் அவா்கள் திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியைச் சோ்ந்த ஆகாஷ்(25), ராஜேஷ்(26), பிரதீப்குமாா்(எ) சேட்டு(27), அருண்பிரகாஷ் (எ) சின்ராஜ்(20 )ஆகியோா் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து திண்டிவனம் போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்தனா்.
காவல் நிலையத்துக்குள் புகுந்து கொலை மிரட்டல்: இது குறித்து தகவலறிந்த ராஜேஷின் சகோதரா் பாலாஜி(21) ராஜேஷின் மனைவி மனோகரி(20) ஆகியோா் காவல் நிலையத்துக்குள் சென்று அங்கு பணிலியிருந்த காவல் உதவி ஆய்வாளா் முருகானந்தம் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், பிரதீப்குமாா்(எ) சேட்டு, ராஜேஷ், பாலாஜி (21), அருண்பிரகாஷ் மற்றும் மனோகரி(20) ஆகிய 5 போ்கள் மீது திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரதீப் குமாா், ராஜேஷ் மனோகரி ஆகிய மூவரையும் கைது செய்தனா்.