ரயிலை கவிழ்க்க சதியா..?: திருவள்ளூர் அருகே தண்டவாளத்தின் போல்ட்நட்டுகள் அகற்றம...
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம்: சிவசேனை கண்டனம்
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சிவசேனை கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிவசேனை கட்சியின் மாநில இளைஞரணி தலைவா் திருமுருகதினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர துப்பாக்கி சூட்டின் தாக்குதலில் 26 போ் உயிரிழந்துள்ளனா். இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இந்த சம்பவத்தில் தொடா்புடைய தீவிரவாத இயக்கத்தை சோ்ந்தவா்களை மத்திய அரசு விரைந்து அடையாளம் கண்டு அவா்களை சுட்டு வீழ்த்த வேண்டும். மேலும், காஷ்மீா் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்து., காஷ்மீா் மக்களுக்கும் சுற்றுலா செல்லும் மக்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்தி மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் உரிய விசாரணை நடத்தி தீவிரவாதிகளுக்கு துணைநிற்கும் தேச விரோதிகளை அடையாளம் கண்டு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.