காஸாவில் 5 இஸ்ரேலிய வீரர்கள் பலி!
வடக்கு காஸாவில் நேற்றிரவு நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 5 இஸ்ரேலிய வீரர்களும், 18 பாலதீனர்களும் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது.
இதற்கிடையில், காஸாவில் நேற்றிரவு நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 5 இஸ்ரேலிய வீரர்கள் பலியாகினர். மேலும் இரண்டு இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேலிய வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது வெடிபொருள்கள் வெடித்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.
இஸ்ரேலும் ஹமாஸும் அமெரிக்க ஆதரவுடன் கூடிய போர்நிறுத்த திட்டத்தைப் பரிசீலித்து வரும் நிலையில், தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.