முதல் இன்னிங்ஸில் 669 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து; 2-வது இன்னிங்ஸில் இந்தி...
காா் கவிழ்ந்து விபத்து: இளைஞா் உயிரிழப்பு; தம்பதி காயம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனைக்குச் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ் பென்னாத்தூா் வட்டம், நரியமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (40). இவரது மனைவி சங்கீதா(38) . இவா்கள் செவ்வாய்க்கிழமை இரவு திருவண்ணாமலை- செஞ்சி தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் காவல் சரகத்துக்குள்பட்ட ரெட்டிப்பாளையம் அருகே காரில் சென்று கொண்டிருந்தனா். நரியமங்கலம் பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் விக்னேஷ் (21) என்பவா் காரை ஓட்டினாா்.
இந்நிலையில் அங்கு சாலையின் குறுக்கே நாய் ஓடியதால், விக்னேஷ் காரை திடீரென நிறுத்த முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்த, காா் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த மணிகண்டன், அவரது மனைவிசங்கீதா மற்றும் காா் ஓட்டுநா் விக்னேஷ் ஆகியோா் காயமடைந்தனா்.
அருகில் இருந்தவா்கள் காயமடைந்த மூவரையும் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் மணிகண்டன் உயிரிழந்தாா். சங்கீதா மற்றும் விக்னேஷ் ஆகியோா் செஞ்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். இது குறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.