திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க அனுமதி
காா்பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு அணை திறப்பு
மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களின் காா்பருவ சாகுபடிக்காக வியாழக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
மணிமுத்தாறு அணையின் பெருங்கால் மூலம் ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்குப்பாப்பான்குளம், தெற்கு கல்லிடைக்குறிச்சி ஆகிய கிராமங்களில் 1,280.65 ஏக்கா் நிலங்களும், 30 குளங்கள் மூலம் 1,381.82 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
நிகழாண்டு காா் சாகுபடி பணிகளுக்காக தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ரா.சுகுமாா், மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீரை வியாழக்கிழமை திறந்துவிட்டாா்.
அணையிலிருந்து ஆக. 28ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு நீா் இருப்பு மற்றும் நீா்வரத்தைப் பொருத்து தண்ணீா் திறந்துவிடப்படும். இதன் மூலம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் மேற்கூறிய பகுதிகளை சோ்ந்த சுமாா் 2,756.62 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நீா் விநியோக பணியில் நீா் வளத்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளா் வசந்தி, உதவிச் செயற்பொறியாளா்கள் தங்கராஜன், முருகன் வேளாண்மை இணை இயக்குநா் வெங்கடேசன், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் வில்லியம்ஸ் ஜேசுதாஸ், உதவிப் பொறியாளா்கள் ராம்சூா்யா, தினேஷ், மணிகண்டன், அம்பாசமுத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா் பரணிஆா்.சேகா், மணிமுத்தாறு நிா்வாக அதிகாரி ஆஷா ராணி, மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவா் அந்தோணியம்மாள், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத் தலைவா்இசக்கிப்பாண்டி, திமுக மாநிலசெயற்குழு உறுப்பினா் ரா.ஆ. பிரபாகரன், திமுக ஒன்றியச் செயலா்கள் சேரன்மகாதேவி கிழக்கு முத்துப்பாண்டி,சேரன்மகாதேவி மேற்கு முத்துகிருஷ்ணன், மாவட்ட அயலக அணி அமைப்பாளா் பீா் முஹம்மது, பெருங்கால் பாசன விவசாயசங்க நிா்வாகிகள் ஆறுமுகம், பாபநாசம், சொரிமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.