கிணற்றில் தவறி விழுந்த மாடு மீட்பு
வந்தவாசி அருகே விவசாய நிலக் கிணற்றில் தவறி விழுந்த எருதை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
வந்தவாசியை அடுத்த வங்காரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவருக்குச் சொந்தமான எருது, இவரது விவசாய நிலத்தில் வியாழக்கிழமை மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த நிலத்தில் இருந்த கிணற்றில் எருது தவறி விழுந்தது.
இதுகுறித்து வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு சுப்பிரமணி தகவல் அளித்தாா். தீயணைப்பு வீரா்கள் சென்று எருதை கயிறு கட்டி கிணற்றில் இருந்து உயிருடன் மீட்டனா்.