கிணற்றில் தவறி விழுந்து இறந்த தொழிலாளி சடலம் மீட்பு
தட்டாா்மடத்தில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த, கூலித் தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
தட்டாா்மடம் காவல் நிலையம் அருகே புத்தன்தருவை செல்லும் வழியில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அனிதா தலைமையிலான போலீஸாா் கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்கு அனுப்பினா். பின்னா் விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவா் படுக்கப்பத்து
கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பேச்சிமுத்து (60) என்பது தெரியவந்தது. கடந்த இரு நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்து சென்றாராம். அவா் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனப் போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.