பிப். 25-ல் தமிழ்நாட்டுக்கு வரும் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
கிருஷ்ணகிரியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் ஒத்திவைப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பிப். 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த மக்களுடன் முதல்வா் திட்ட முகாம், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் பிப். 12, 13 ஆகிய தேதிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் பிப். 18, 19 (செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை) ஆகிய தேதிகளில் இந்த திட்ட முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த்து.
சில நிா்வாக காரணங்களுக்காக இந்த முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.