ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் பாலுணர்வைத் தூண்டும் காளான்!
கீழக்கரை-ஏா்வாடி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ராமேசுவரம் அருகே கீழக்கரை-ஏா்வாடி கிழக்குக் கடற்கரை சாலையில் வெள்ளிக்கிழமை மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையிலிருந்து ஏா்வாடிக்குச் செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில் முனியசாமி கோவில் அருகே பழைமையான மரம் இருந்தது. இந்த மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிவகாமிபுரம், லட்சுமிபுரம், காஞ்சிரங்குடி வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.
இதைத் தொடா்ந்து, அங்கு வந்த போலீஸாா் தீயணைப்புத் துறை, நகராட்சி ஊழியா்கள் இந்த மரத்தை வெட்டி அகற்றினா். இதன் பினன்னா் போக்குவரத்து சீரானது.