கீழ்குளம் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா!
புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் அரசுப் பள்ளியில் விளையாட்டு விழா, இலக்கிய மன்ற விழா, பள்ளி ஆண்டுவிழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் விஜிலா தலைமை வகித்தாா். தலைமைஆசிரியை ரேகா முன்னிலை வகித்தாா்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக பேராசிரியா் சஜீவ் பங்கேற்று வாழ்த்திப் பேசியதோடு, மாணவா், மாணவிகளுடன் கலந்துரையாடினாா். மாநில பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் சிந்துகுமாா் பேசினாா். தொடந்து, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவா், மாணவிகதளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், கிள்ளியூா் வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா் பிராங்கிளின், கீழ்குளம் பேரூராட்சி உறுப்பினா் கிருஷ்ணன், பெனிலா, செலின்மேரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.