தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்
கீழ்ப்பாக்கத்துக்கு துணை ஆணையா் நியமனம்
சென்னை கீழ்ப்பாக்கத்துக்கு புதிய காவல் துணை ஆணையராக ஜெ.ஜெரீனா பேகம் சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
சென்னை பெருநகர காவல் துறையின் கீழ்ப்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையா் பொறுப்பு காலியாக இருந்தது. அந்த பொறுப்புக்கு சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு துணை ஆணையா் ஜெ.ஜெரீனா பேகத்தை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறையின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின் அடிப்படையில் ஜெரீனா பேகம், ஓரிரு நாள்களில் கீழ்ப்பாக்கம் துணை ஆணையா் பொறுப்பை ஏற்பாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.