செய்திகள் :

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: 3 மணி நிலவரப்படி 96% வாக்குப்பதிவு!

post image

புதிய குடியரசுத் துணைத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்காக விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் 96 சதவீத எம்பிக்கள் வாக்களித்துள்ளனர்.

குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 21-இல் தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், 15-வது குடியரசு துணைத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தேர்தலில், பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும் (67), எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் பி. சுதா்சன் ரெட்டியும் (79) போட்டியிடுகின்றனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமர் மோடி முதலாவதாக வாக்களித்தார். அதைத் தொடர்ந்து எம்.பி.க்கள் வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர்.

முன்னாள் பிரதமரும், மாநிலங்களவையில் ஜேடி(எஸ்) எம்பியுமான எச்.டி. தேவகௌடா சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா உள்ளிட்டவர்களும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜெ.பி. நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் தங்களின் வாக்கைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் மாலை 3 மணி நிலவரப்படி இதுவரை 96 சதவீத எம்பிக்கள் வாக்களித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: தலைவர்கள் வாழ்த்து!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நரேந்திர மோடி நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,''202... மேலும் பார்க்க

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி... மேலும் பார்க்க

ரூ. 30,000 கோடி சொத்தில் பங்கு வேண்டும்: கரிஷ்மா கபூரின் வாரிசுகள் வழக்கு!

நடிகை கரிஷ்மா கபூரின் வாரிசுகள் ரூ. 30,000 கோடி சொத்தில் பங்கு கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.மறைந்த தொழிலதிபர் சஞ்சய் கபூர் - கரிஷ்மா கபூர் தம்பதியின் மகள் சமைரா, மகன் கியான... மேலும் பார்க்க

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி!

குடியரசு துணைத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் 15வது குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் பொறுப்பே... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: வாக்களிக்காத 13 பேர் யார்?

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 13 பேர் வாக்களிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. காலை 10 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். மாலை 5 மணியுடன... மேலும் பார்க்க

பாபா ராம்தேவ் மீதான வழக்கு: சத்தீஸ்கர் காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல்! அடுத்து என்ன?

யோகா குரு பாபா ராம்தேவ் மீதான வழக்கில் சத்தீஸ்கர் காவல் துறை விசாரணை இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப். 9) தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, கடந்த 2021-இல் கரோனா சிகிச... மேலும் பார்க்க