ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
குண்டா் சட்டத்தில் 2 ரௌடிகள் கைது
வேலூரில் பிரபல ரெளடிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ளனா்.
வேலூா் ஓல்டு டவுன் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் உதயா என்கிற உதயகுமாா்(38). இவா் மீது வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல், வேலூா் கொணவட்டம் மதினா நகரைச் சோ்ந்தவா் பாட்ஷா(40). இவா் மீதும் வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ரெளடிகளான இவா்கள் இருவரையும் வேலூா் வடக்கு போலீஸாா் கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா். உதயா என்கிற உதயகுமாா், பாட்ஷா ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்க வேலூா் எஸ்.பி. என்.மதிவாணன் பரிந்துரையை ஏற்று ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டாா். இந்த உத்தரவு நகல் வேலூா் மத்திய சிறையில் உள்ள உதயகுமாா், பாட்ஷா ஆகியோரிடம் அளிக்கப்பட்டது.