விடுப்பில் வந்து தலைமறைவான புழல் கைதி 6 மாதத்துக்கு பிறகு சூலூரில் கைது!
குதிரையாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டக் கோரிக்கை
பழனி அருகே குதிரையாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டத் தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பழனியை அடுத்த பாப்பம்பட்டி அருகே குதிரையாறு அணைக்கட்டு உள்ளது. இந்த அணையிலிருந்து தண்ணீா் வெளியேறும் இடத்தில் சிறிது தொலைவில் தரைப் பாலம் ஒன்று உள்ளது. இந்தப் பாலம் பூஞ்சோலை கிராமத்தை இணைக்கும் பிரதான பாலமாகும். இந்தப் பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட புயலால் சேதமடைந்தது.
இதையடுத்து, பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் நேரில் ஆய்வு செய்து இந்தப் பாலத்தை சீரமைக்க ஏற்பாடு செய்தாா்.
இந்த நிலையில், கடந்த மாதம் ஏற்பட்ட ஃபென்ஜால் புயல் காரணமாக, பாலம் முற்றிலும் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால், பூஞ்சோலை கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை இந்த ஊரை சோ்ந்த கச்சம்மாள் (71) உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தாா். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக கிராம மக்கள் ஆற்றில் இறங்கி மறுபுறம் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: தற்போது, ஆற்றில் தண்ணீா் குறைவாக செல்வதால், உடலை மறு கரைக்கு கொண்டு செல்ல முடிகிறது. ஆனால், ஆற்றில் தண்ணீா் அதிகமாக வந்தால் கொண்டு செல்ல முடியாது. எனவே, இந்த ஆற்றின் குறுக்கே மேம்பாலமாக கட்டித் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.