கும்பமேளாவில் புனித நீராடிய குடியரசுத் தலைவர்!
மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு திங்கள்கிழமை காலை புனித நீராடினார்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் வெவ்வேறு நாள்களில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
இதையும் படிக்க : எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான 5,000 வழக்குகள்: விரைந்து முடிக்க உச்சநீதிமன்றத்தில் மனு
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை விமானம் மூலம் பிரயாக்ராஜுக்கு வருகைதந்த குடியரசுத் தலைவர், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
இந்த நிகழ்வில், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.